Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

மனிதநேயமே எங்கள் வழி.

சமூக மாற்றமே எங்கள் இலக்கு

மக்கள் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக மாற்றத்திற்காக செயலாற்றும் ஒரு மக்கள் இயக்கம்.

A.S. சங்கரபாண்டியன்

இயக்கத்தின் தொடக்கம்

சமூக பொதுநல இயக்கம் A.S.சங்கரபாண்டியன் அவர்களால் தொடங்கப்பட்டது.

30.04.1988 அன்று இயக்கம் குமரி மாவட்டம்- ஆரல்வாய்மொழியில் தொடக்கவிழா மூலம் முறைப்படி தொடங்கப்பட்டது. ஆனால் 1986 முதலே மக்கள் பணிகள் இதன் மூலம் தொடங்கப்பட்டதுடன் நிர்வாக கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

வாழ்க வையகம்!
வெல்க மனிதநேயம்!

இலக்கு

சமூக மாற்றம் – ஒவ்வொரு மனிதனும் ஒளிமயமான சமூகத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.

நோக்கங்கள்

  • சமூக பொருளாதார மறுமலர்ச்சி
  • மூடநம்பிக்கைகளை அகற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல்
  • மனிதநேயமும் மக்கள் ஒற்றுமையும் அடிப்படையாகக் கொண்ட அன்பு புரட்சி

தாரக மந்திரம்

  • நற்சிந்தனை
  • நற்சொல்
  • நற்செயல்

அடிப்படை வாசகம்

  • வாழ்க வையகம்
  • வெல்க மனிதநேயம்

உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள்

  • தனிமனித ஒழுக்கம் (சுய கட்டுப்பாடு)
  • சேவை மனப்பான்மை
  • அன்பு செய்தல்
  • சகிப்புத்தன்மை (அஹிம்சை)
  • எதிர்பார்ப்பு இல்லாத லட்சிய முயற்சி

கொள்கைகள்

  1. சுயவளர்ச்சி, சுய பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு போன்றவற்றை வளர்த்தல்.
  2. சாதி, மத,இன, மொழி, பேதமின்றி சமத்துவ சமுதாயம் ஏற்படவும் மனிதநேய சமூகம் மலர பாடுபடுதல்.
  3. அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெற விழிப்புணர்வும் முயற்சியும் மேற்கொள்ளுதல், மக்களின் தேவைகளை,பிரச்னைகளை, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்றி மக்கள் பயன்பெற பாடுபடுதல்.
  4. சமூகத்தில் பின்தங்கியவர்கள், நலிந்தோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் முதியோர் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது.
  5. மது, ஊழல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்வது, சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவற்றை களைய பாடுபடுவது.
  6. சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தடுக்கவும், இயற்கை நேய சமுதாயம் மலரவும் பாடுபடுவது.
  1. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வது
  2. கலை, இலக்கியம் கல்வி, கலாச்சாரம்,விளையாட்டு இவற்றை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் பாடுபடுதல்.
  3. விவசாயிகள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளிகள் மேம்பாட்டிற்கென திட்டங்கள் வகுத்து செயல்படுவது.
  4. இயற்கை மருத்துவம், சுகாதாரம் மற்றும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மேற்கொள்தல்,பாதிக்கப்படும் நுகர்வோர் மற்றும் மனித உரிமை தொடர்பாக தீர்வுகாண பாடுபடுதல்.
  5. தேசபற்று, தியாகமனப்பான்மை/சுய ஒழுக்கம்/ தன்னம்பிக்கை/கட்டுப்பாடு உடையவர்களாக உருவாக்கிட பாடுபடுதல். உலக அமைதி, மக்கள் ஒற்றுமை ஏற்பட முனைவது.
  6. மக்களையும், இயற்கையினையும் ஆதாரமாக கொண்ட மாற்று வளர்ச்சிப் போக்கு ஏற்பட முயல்வது. மாற்று அரசியல் மூலமாக மக்கள் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது.

நிர்வாகிகளின் கடமைகள்

மக்களை சந்தித்தல்

மக்களுக்காக சிந்தித்தல்

மக்கள் பிரச்னைகளுக்காக போராடுதல்

மக்களை இயக்கமாக ஒருங்கிணைத்தல்

மக்கள் தங்களது திட்டங்களை தாங்களே தீர்மானித்து செயல்படுத்திட வழிகாட்டுதல்.

உங்கள் உரிமைக்காக குரல் கொடுங்கள்.
சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்!

தலைமைச் செயலகம்

சமூக பொதுநல இயக்கம்