கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளக் கொள்ளை சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கனிமவள விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.