அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தமிழகத்தின் முக்கிய நீர்வளத் திட்டங்களில் ஒன்றான ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் தேவைகள் மற்றும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.