தக்கலையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடந்து செல்ல தவிப்பு.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, பஞ்சாயத்துக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கப்படும் எனவும் இதுதொடர்பாக சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் எனவும் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதே. ஆனால் இன்னும் பல அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான பாதை அமைக்கப்படாமல் உள்ளதே இதனை ஏன் அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை. தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்ல வாழ்வதற்கே போராடி வரும் நிலையில் பல்வேறு நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதன் ஓர் அம்சமாக இவர்களது நலனையோ,…