செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.
சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின் இதனை மறந்து விடுவார்கள்.மீண்டும் அடுத்த தேர்தலில் இதே வாக்குறுதி அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் தவறாது இடம்பெறும்..உண்மையில் இந்த திட்டம் கைவிடப்பட்டு நாட்கள் ஆயிற்று..இதனை தெரியாமலே அவர்கள் திட்டம் கொண்டுவருவதாக சொல்வதும், பின்னர் அதனை மறந்துவிடுவதும் வாடிக்கையான வேடிக்கை. செண்பகராமன்புதூரில் என்.எஸ்.கே. பாலிடெக்னிக் அருகாமையில் உள்ள 47.86.16 ஹெக்டேர் நிலம்…