ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –
ஆரல்வாய்மொழியில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் உள்ளது தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி. கடந்த 78 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இங்கிருந்த பழைய ஓட்டு கட்டிடம் இருந்த இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 19.80 லட்சம் செலவில் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 7.3.2024 அன்றுN.தளவாய்சுந்தரம் M.L.A இதனை திறந்து வைத்தார். பள்ளி கட்டிடம் கட்டி ஒரு ஆண்டிற்குள் இதன் மேல்தளத்தின்…