Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு, முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு

குமரி மாவட்டத்தில் சமூக பொதுநல இயக்க ஒன்றிய அளவிலான கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

முஞ்சிறை ஒன்றியம்.
பைங்குளம் பகுதியில் முஞ்சிறை ஒன்றியக்கூட்டம் செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி மாவட்ட பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார். அமைப்பு செயலாளர் N.வினுகுமார், சுற்றுசூழல் மேம்பாட்டு அணி செயலாளர் C.M.ராஜேஷ் சிங், மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் R.ரெவி, அருண் வித்யசாகர், ஜேம்ஸ் பிரவின் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கடை தபால்நிலையம் அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பைங்குளம், வேட்டமங்கலம் சாலை, பரக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.