தமிழகத்தில் அட்டை கத்தியாகிப்போன ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மொரார்ஜி தேசாய் தலைமையில் 1966 ல் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய, மாநில அரசுகளில் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், குடிமக்களின் குறைகளை களைவதற்கு சில அமைப்புகளை உருவாக்க பரிந்துரைத்தது. இதன்படி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகள் உருவாக்கிட பிரதமர் இந்திராகாந்தியிடம் ஆணையம் 20.10.1966 ல்அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் இதற்கான சட்டம் 2013ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 16.1.2014…