குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது.. இம்மலைத்தொடர் குமரி மாவட்டத்தில் மகேந்திரகிரிமலை, காற்றாடி மலை, தாடகை மலை, அசம்புமலை, கல் மலை, கோதைமலை, முத்துக்குழி வயல் மலை, நாகமலை, வெள்ளிமலை, மோதிரமலை, மைலார் மலை, காளிமலை, குருசுமலை, மங்களா மொட்டைமலை, மாங்காமலை, விளாமலை, கொட்டாரக் குன்று, பொதி அவுத்தான் குன்று, எலிப்பாறைக்குன்று, மொட்டைக்காவுமலை, வள்ளுவன் பொத்தை,…