குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –
தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர் மார்த்தாண்டவர்மர் ஆகிய பெயர்களின் சுருக்கமே ஏ.வி.எம். எனப்படுவது. கடந்த 1860ல் திருவிதாங்கூர் மன்னர் உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மாவால் பூவாறில் இருந்து தொடங்கப்பட்டு தேங்காய்பட்டணம் வரை 100 அடி அகலத்தில் கால்வாய் வெட்டப்பட்டது. அதன் பின் 1863ல் ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜாவால் இப்பணி தொடரப்பட்டு 1867ல் மண்டைக்காடு வரை…