கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும், ரசாயன மாசுபாடு காரணமாக விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்கவும், பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்ற (Zero Liquid Discharge) முறையை கட்டாயமாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.