கோயம்புத்தூர் அருகே பாலமின்றி பரிதவிக்கும் மலைகிராமம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் இருளர் பழங்குடியின மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கை கடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. மருத்துவ அவசர சேவை, கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.