சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் பாடப்புத்தகங்களில் அவரது வாழ்க்கை வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.