நாகர்கோவிலில்இலவச பொதுகழிப்பிடம் அடியில் உணவகங்கள் செயல்படுத்த தடை -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் செலவில் இலவச பொதுகழிப்பிடம் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த பயன்தருவதாக காணப்படுகிறது. இக்கழிப்பிடம் மேல்மாடியில் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தரைத்தளத்தில் கடைகள் கட்டி மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதில் தற்போது உணவகம், பேக்கரி, டீ கடை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இக்கடைகள் பேருந்துநிலைய…