பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடிமுதல் முடி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுவதால் அதனை கற்பகதரு என்று அழைக்கின்றோம். பனையின் ஓலையின் மூலமே சுவடிகளாய் நமது இலக்கியங்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டன. சோழ மன்னர்கள் தங்கள் பொற்காசுகளில் அடையாள சின்னமாய் பனைமரத்தை பதித்தனர். இதன் பெருமை கருதி பாரிமன்னன் தனது சின்னமாக பனைமரத்தை வைத்து இருந்தான். உலகின்…